கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றவரை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடையன் என்பவர் மிரட்டி தாக்கியதாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாவட்ட தொண்டரணி துணைச் அமைப்பாளர் சந்திரசேகர் அளித்த பேட்டியில், கரூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்க செல்லும் போது மரியாதையாக காவலர்கள் நடத்த வேண்டும். பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
அக்டோபர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாயனூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்ற வீரராக்கியம் நடராஜபுரம் காலனியைச் சேர்ந்த குணால் மற்றும் அவரது தந்தை மணிகண்டன் ஆகியோரை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சடையன் என்பவர் மிரட்டி மணிகண்டனை தாக்கியதாகவும் இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்பவரிடம் புகார் அளிக்க சென்றபோது வழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மணிகண்டனின் மகன் குணால் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இடம் புகார் அளித்திருப்பதால் , உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சந்திரசேகர் கோரிக்கை விடுத்து பேட்டி அளித்தார்.