வடக்குபாளையம்- திருக்குட நல் நீராட்டு பெருவிழா நடைபெற்றது.

62பார்த்தது
வடக்கு பாளையத்தில் அரசு வேம்பு விநாயகர், அருள்மிகு பாலகுமாரன் திருக்கோவிலில் திருக்குட நல் நீராட்டு பெருவிழா நடைபெற்றது.


கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள வடக்கு பாளையம் கிராமத்தில் குமரன் குடில், குமரன் லே அவுட், குமரன் லே அவுட் விஸ்தரிப்பு பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அரசு வேம்பு விநாயகர், அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நல் நீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கோ தரிசனம், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பெரும் பேரொளி வழிபாடு, திருவாளன் திருநீரு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, கோபுர கலசத்தில் பூக்களை தூவி, மந்திரத்தை உச்சாடனம் செய்து, புனித நீரை ஊற்றி திருக்குட நல் நீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா நிறைவில் அன்னதானம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி