தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மனவாசி சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் திருவுருவுச்சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அனிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வன்னியரசு என்கிற மகாமுனி தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் உதயநிதி, பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், பார்த்திபன், சந்தோஷ், பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் நாகராஜன், முருகேசன், பெரியார் திராவிட இயக்க பொறுப்பாளர் காமராஜ், கண்ணன் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். இதேபோன்று பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.