கரூர் தான்தோன்றிமலை பொன்கலை நாட்டு ரெட்டி நல சங்க திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த ரெட்டி நல சங்கத்தின் மகாசபை கூட்டம் மற்றும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மற்றும் பாராட்டு விழா என முப்பெரும் விழா கரூர் மாவட்ட தலைவர் C. பாலன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கரூர் மாவட்ட ரெட்டி சேரிடபுள் டிரஸ்ட் அட்வகேட் N. பாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பி. அசோக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட மாவட்டத் துணைத் தலைவர்கள் எம். ஆர். ரங்கராஜ், ஜெயராமன், ரமேஷ், கரூர் நகர தலைவர் ரமேஷ், தான்தோன்றிமலை நகர தலைவர் ரங்கநாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் எம். சுப்புராமன், கிராமியம் அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி. நாராயணன் மற்றும் மத்திய அரசின் சிறந்த போஸ்ட்
மாஸ்டர் விருது பெற்ற கே. ஸ்ரீதர், துளசி கொடும்பு கே. எஸ். வி பள்ளியின் தலைமை ஆசிரியர் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற கே. பத்மாநாபன் உள்ளிட்டோருக்கு பாராட்டு கேடயம் வழங்கி நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றியுரை கூறினார்.