கரூரில் பூண்டு விலை கிடு கிடு உயர்வு

1551பார்த்தது
கரூரில் கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுப்பூண்டு 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

மலைப்பூண்டு ஒரு கிலோ ஒன்று கடந்த வாரம் ரூபாய் 160க்கு வைக்கப்பட்ட நிலையில் இன்று ரூபாய் கிலோ 220 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

வழக்கமாக பூண்டின் விலை டிசம்பர் மாதத்தில் அதிகரித்து காணப்படும் ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ள திடீர் விலை ஏற்றம் வியாபாரிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், குறிப்பாக அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வெளியேற்றம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பூண்டின் விளையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி