பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்து

60பார்த்தது
பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்து
கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (38). இவர் மனவாசி டோல் பிளாசாவில் சிஸ்டம் இன்ஜினியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பைக்கில் திருக்காம்புலியூர் புற்றுக் கோவில் அருகே சென்ற போது எதிரே ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் ஓட்டி வந்த டேங்கர் லாரி மோதியதில் கருப்பண்ணசாமி படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி