ஓடமுடையார்பாளையம் தொடக்கப்பள்ளியில் பள்ளிஆண்டு விழா

585பார்த்தது
ஓடமுடையார்பாளையம் தொடக்கப்பள்ளியில் பள்ளிஆண்டு விழா
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி ஒடமுடையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பள்ளிஆண்டுவிழா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை P. வசந்தி, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கௌரி, எஸ் எம் சி கல்வியாளர் சதீஷ் கண்ணன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பள்ளி உதவியாசிரியர் ரஞ்சித் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி