கடவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்கிடவும், சட்ட கூலி ரூபாய் 319 வழங்கிடவும், வலியுறுத்தி 100 நாள் வேலையை விவசாய பணிகளோடு இணைத்து விடவும் வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி