காற்றாலை லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

67பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா உட்பட்ட மாணிக்கபுரம், பாறைப்பட்டி, காணியாளம்பட்டி, சேங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகள் அமைக்க காற்றாலை இறக்கைகள் பெரிய, பெரிய லாரிகளில், எடுத்து செல்வத்தால், சேங்கல் மாணிக்கபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 20 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவில் அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் மின்தடைகள் ஏற்பட்டு வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கம் இன்றி இருந்து வருவதாகவும் மற்றும் பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு மின்சாரம் இல்லாமல் இருந்து வருவதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதியில் தினந்தோறும் கால்நடைகள் திருடப்பட்டு வருவதாகவும் பல்வேறு முறை வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனுக்கள் அளித்தும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக இப்பகுதியில் தனியார் காற்றாலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணிக்கபுரம் பகுதியில் வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி