கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா குருணி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் இப்ராஹிம் (55). இவர் தனக்கு சொந்தமான பேசஞ்சர் ஆட்டோவை கடந்த மூன்றாம் தேதி தண்ணீர் பந்தல் மேடு அரசு கலைக்கல்லூரி அருகே சென்ற போது சாலையின் ஓரம் எந்த சிக்னலும் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த லாரி பின்புறம் மோதியதில் இப்ராஹிம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாக்குமூலம் பெற வந்த போலீசாரிடம் எந்த வழக்கும் வேண்டாம் என கூறியுள்ளனர். தற்போது லாரி ஓட்டுநர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் இப்ராஹீம் மகன் ரகமத்து நிஷா அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.