கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கள்ள பள்ளி ஊராட்சியில் ரூ. 37. 20 லட்சம் மதிப்பீட்டில் லாலாபேட்டை முதல் பில்லா பாளையம் வழியாக கள்ளப் பள்ளி வரை சுற்று சுவருடன் கூடிய புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்