டூவீலர்மீது மினிடிராவல்ஸ் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

83பார்த்தது
துறையூர் அருகே டூவீலர் மீது மினி டிராவல்ஸ் வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், பாகனத்தம் அருகே முஷ்டகிணத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கருப்பசாமி வயது 28.

இவர் மே 31ம் தேதி காலை 8: 30 மணி அளவில் , துறையூரில் இருந்து முஷ்ட கிணத்துப்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார்.

இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள ராமசாமி என்பவர் தோட்டம் அருகே சென்ற போது ,

அதே சாலையில் பின்னால் வந்த கரூர் , வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிபட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 29 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மினி டிராவல்ஸ் வாகனம் கருப்பசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் வாகனத்துடன் கீழே விழுந்த கருப்பசாமிக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் , உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த கருப்பசாமியின் தந்தை பெரியசாமி அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர் , மினி டிராவல்சை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி