திருச்சி மாவட்டம் வெள்ளப்பெருக்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (60). பால் வியாபாரியான இவர் கடந்த 5 ஆம் தேதி அன்று வேனில் பால் ஏற்றிவிட்டு தனது பைக்கில் மாங்குளத்து பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நான்கு சக்கர வாகனம் மோதியதில் பழனியப்பன் படுகாயம் அடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். பழனியப்பன் மகன் நவீன் குமார் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.