லட்சுமணப்பட்டி-டூவீலர்கள் நேருக்குநேர் மோதல். இருவர்படுகாயம்

71பார்த்தது
லட்சுமணப்பட்டியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.


கரூர், தாந்தோணி மலை , அன்பு நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 54.


இவர் ஜூன் 9-ம் தேதி மாலை 5: 30 மணி அளவில் , கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சேங்கல் பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் லட்சுமணன் பட்டி அருகே சென்றபோது ,


எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா , பாம்பரன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 25 என்பவர்வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் ,

ராமச்சந்திரன் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.



இதில் ராமச்சந்திரனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் , ராஜகுமாரை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி