கரூர்: வாகனம் மோதி தந்தை மகன் படுகாயம்

73பார்த்தது
கரூர்: வாகனம் மோதி தந்தை மகன் படுகாயம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழைய ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் 75. இவர் கடந்த 22 ஆம் தேதி தனது மகன் ரெங்கசாமியுடன் பழைய ஜெயங்கொண்டம் சமுதாயக்கூடம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக டிவிஎஸ் XL வாகனத்தை ஓட்டி வந்து மோதியதில் தந்தை மகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி