விவசாயிகள் சங்கம் நகல் எரிப்பு போராட்டம்

64பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக நகல் எரிப்பு போராட்டம் கரூர் மாவட்டம் சித்தலவாய் கடைவீதியில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், விதொச மாவட்ட செயலாளர் ராஜு, சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், தவிச ஒன்றிய செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு நகல் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரையும் கைது செய்து காவல் வேனில் ஏற்றிச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி