கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு-இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

74பார்த்தது
அமராவதி நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு-தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.


கரூர் மாவட்டம், புலியூர், அமராவதி நகர், செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரதாப் மனைவி சத்யா வயது 28.

இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.

ஆயினும், கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனால் விரக்தி மனப்பான்மையோடு வாழ்ந்து வந்த சத்தியா டிசம்பர் 27ஆம் தேதி அதிகாலை 4. 30 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த சத்யாவின் தாயார் அழகம்மாள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சத்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி