கரூரில், கொங்குநாடு கண்ணப்ப நாயனார் கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்த்தி ஹோட்டலில் உள்ள அழகம்மை மஹாலில், கொங்குநாடு கண்ணப்ப நாயனார் கல்வி அறக்கட்டளை சார்பில் 12 ஆம் ஆண்டு கல்வி ஊக்க பரிசளிப்பு விழா அறக்கட்டளை தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளர் முத்துசாமி, பொருளாளர் கருப்பண்ணன் மற்றும் கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் சங்க இளைஞரணி நிறுவனர் "கவுண்டர் ஐயா" என அழைக்கப்படும் மருதமுத்து கவுண்டர் அவர்கள் நினைவாக, பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில், கரூர் மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் சமூகம் சார்ந்த மக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கல்வி ஊக்கப் பரிசுளிப்பு விழாவை சிறப்பித்தனர்.