வீரவள்ளியில்- நிலம் குத்தகை எடுத்தது தொடர்பாக உறவினர்கள் இடையே தகராறு ஒருவர் கைது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி விஜயலட்சுமி வயது 53.
இவர் தனக்கு சொந்தமான 1- ஏக்கர் நிலத்தை திம்மாச்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த மருமகன் முறை கொண்ட உறவினர் ஆறுமுகத்திடம்
ரூ. 2, 50, 000-க்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 8ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், குத்தகைக்கு கொடுத்த நிலத்தை பார்வையிட வந்த விஜயலட்சுமியிடம், நிலத்திற்கு நடுவே சாலை அமைத்து தர கேட்டார் ஆறுமுகம்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. ஒரு கட்டத்தில் ஆறுமுகம் விஜயலட்சுமியை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி விஜயலட்சுமியை துன்புறுத்தி மிரட்டல் விடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பெண்ணை தகாத வார்த்தை பேசி, தாக்கி மிரட்டல் விடுத்த குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் லாலாபேட்டை காவல் துறையினர்.