கடவூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனைக் கூட்டம்

571பார்த்தது
கடவூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனைக் கூட்டம்
கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் பற்றாக்குறை தொடர்பான குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் , கடவூர் வட்டாட்சியர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
கடவூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் R. K. சுதாகர் அவர்கள் , தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மா. ரகுநாதன் அவர்கள், கடவூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மு. ராமலிங்கம் அவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி