வடக்குபாளையத்தில் சிறுவன் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து. சிறுவன் படுகாயம்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, முத்துலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் நவீன் வயது 14.
ஜூலை 24ஆம் தேதி காலை 7: 30- மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் நவீன் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.
அப்போது எதிர்திசையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த செல்வம் கல்லூரி பேருந்து, நவீன் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நவீனுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த நவீனின் தாயார் ஈஸ்வரி வயது 33 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கல்லூரி பேருந்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.