கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மனவாசியை சேர்ந்தவர் பரிமளா (37). இவருக்கும் தமிழரசி என்பவருக்கும் ஆடு மேய்த்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழரசி குச்சியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது மாயனூர் போலீசார் நேற்று (டிசம்பர் 21) வழக்கு பதிவு செய்துள்ளனர்.