பெட்ரோல் பங்க் கேசியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

62பார்த்தது
பெட்ரோல் பங்க் கேசியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா மேலப்பகுதி சி. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (31). இவர் சி. புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகின்றார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், கருப்பசாமி ஆகிய இருவரும் பெட்ரோல் போட்டு விட்டு பணம் தராமல் செல்வதாக வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் பெட்ரோல் போட வந்ததற்கு மாரியப்பன் மறுத்ததால் தகாத வார்த்தையால் திட்டி அடித்துள்ளனர். இதில் காயப்பட்ட மாரியப்பன் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிந்தாமணிப்பட்டி போலீசார் 2 பேர் மீது நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :