சணப்பிரட்டி- நரசிம்ம சமுத்திரம் நற்பணி மன்றம் அறக்கட்டளை சார்பில் உபன்யாசம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள நரசிம்ம சமுத்திரம் என்கிற சனப்பிரட்டி அக்ரகாரத்தில் குடி கொண்டிருக்கும்
ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டாவது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு கலசஸ்தாபனம், ருத்ர மஹன்யாஸ ஜபஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து 7: 30 மணிக்கு விசேஷ அபிஷேகம் , ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சஹஸ்ர நாம பூஜை நடைபெற்றது.
காலை 8: 30- மணிக்கு சதுர்வேத பாராயணமும்,
10 மணிக்கு பிரசாத விநியோகமும் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில் நெரூர் விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு உபன்யாசம் வழங்கி ஆசீர்வதித்தார்.