விசிக தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை யொட்டி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லட்சுமணன்பlட்டி பாம்பலம்மன் கோவிலில் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் இரா. முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி (எ) வன்னியரசு கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா. உதயநிதி, சேங்கல் சுபாஷ், புதுப்பட்டி பெரியசாமி, விமல், கனகராஜ், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்