குடும்ப தகராறில் குருணை மருந்து குடித்த இளம்பெண் உயிரிழப்பு

69பார்த்தது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் தனப்பிரியா (23). இவர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரகாஷ் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதனால் கோபம் அடைந்த தனப் பிரியா வீட்டில் வைத்திருந்த குருணை மருந்தை குடித்துள்ளார். குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனப்பிரியா உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனப்பிரியா தந்தை ஸ்ரீரங்கன் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணி பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி