கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா தந்திரி பட்டியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30), மரம் வெட்டும் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்த போது அங்கு வந்த வெள்ளையன் என்பவர் எனது மனைவியை மரம் வெட்ட ஏன் கூட்டிட்டு போறீங்க என கேட்டு அறிவாளால் வெட்ட வந்துள்ளார். இதை தடுத்த போது ஐயப்பன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து வெள்ளையனை கைது செய்தனர்.