அய்யம்பாளையத்தில் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

59பார்த்தது
அய்யம்பாளையத்தில் மாடுகள் மாலை தாண்டும் விழா. இளைஞர்கள் உற்சாகம்.

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜெகதாபி ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருடம் தோறும் மாடு மாலை தாண்டு்ம் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கிராம மக்கள் தங்கள் வளர்க்கும் எருதுகளை தெய்வமாக மதித்து வருகின்றனர்.

பொதுவாக கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழவும், கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், நீர் ஆதாரம் பெருகவும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் செல்வ செழிப்போடு விளங்கவும், அவர்களது இஷ்ட தெய்வத்திற்கு வேண்டும் நிகழ்வாக மாடு மாலை தாண்டும் விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், தாங்கள் வளர்த்து வரும் எருதுகளை கோவில் முன்பு கொண்டு வந்து இறைவனிடம் ஆசி பெற்று பிறகு, எல்லை தெய்வம் இருக்கும் இடம் வரை எருதுகளை நடக்க வைத்து அழைத்து செல்கின்றனர்.

பிறகு அங்கு ஒரு பூஜை செய்த பிறகு எருதுகளை அவிழ்த்து விட்டு ஓட விடுகின்றனர்.

இதில் முதலில் வரும் எருதுகளை வளர்த்து வரும் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை இஷ்ட தெய்வம் நிறைவேற்றி தரும் என்ற மரபின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது.

மாடுகள் ஒருசேர மாலை தாண்டுவதற்காக பரபரப்புடன் செல்லும் காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்காக.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி