நின்று கொண்டு இருந்த குழந்தை மீது கார் மோதி விபத்து.

68பார்த்தது
காந்தி நகரில் நின்று கொண்டு இருந்த குழந்தை மீது கார் மோதி விபத்து. குழந்தை படுகாயம்.

கரூர் மாவட்டம், தாந்தோணி மலை, காந்திநகர் , ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் வயது 46. இவரது மகள் அத்விகா வயது 5.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு குழந்தை அத்விகா அவர்களது வீட்டின் முன்பாக நின்று கொண்டு இருந்தார்.

அப்போது கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா , டிஎன்பிஎல் காலனி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 56 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் எதிர் திசையில் வந்து , நின்று கொண்டு இருந்த குழந்தை அத்விக மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காயமடைந்த குழந்தையை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இச்சம்பவம் அறிந்த குழந்தையின் தந்தை பிரபாகர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர் ,


இது தொடர்பாக நேற்று காரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி