பள்ளி மாணவனை தாக்கிய 4 பேர் கைது, 2 பேருக்கு வலைவீச்சு

67பார்த்தது
பள்ளி மாணவனை தாக்கிய 4 பேர் கைது, 2 பேருக்கு வலைவீச்சு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் வயது 17 இவர் பஞ்சப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றார் இந்த நிலையில் நேற்று முன்தினம் கதிரேசன் அவரது நண்பர் பிரதீபன் ஆகிய இருவரும் கடந்த 26 ஆம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது இரண்டு பேர் பைக்கில் வேகமாக மோதி தகராறு செய்துள்ளனர் பிறகு நேற்று முன்தினம் மாலை பஞ்சபட்டி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த கதிரேசனை ஆறு பேர் பைக்கில் ஏற்றிக்கொண்டு போத்தராவுத்தும்பட்டி அருகே உள்ள முள்ளு காட்டிற்கு அழைத்துச் சென்று கையாள் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் பிறகு அங்கிருந்து பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்றுள்ளதாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து கதிரேசன் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து 6 பேர் மீது நேற்று வழக்கு பதிந்த லாலாபேட்டை போலீசார் கொமட்டேரியை சேர்ந்த சக்திவேல், தாதம்பட்டியை சேர்ந்த அஜித்குமார், மணிவேல், போத்தராவுத்தன்பட்டியைச் சேர்ந்த பாரதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளாளபட்டியை சேர்ந்த சுகு, பஞ்சபட்டியைச் சேர்ந்த மனோஜ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி