கரூர் - Karur

கரூர்-தடைபட்ட வளர்ச்சி திட்டபணிகள் விரைவில் முடிக்கப்படும்.

கரூரில், தடைபட்ட பல்வேறு வளர்ச்சி தட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி- மேலப்பாளையம் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ரிங் ரோடு உடன் பாலப்பணிகளை முடிக்க திட்டமிட்டதில் காலதாமதம் ஆகிவிட்டது. எனவே இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உடனடியாக பாலம் திறக்கப்படும் என தெரிவித்தார். இதே போல தடைபட்ட புதிய பேருந்து நிலையம் பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளதாகவும், இன்னும் மூன்று மாத காலத்திற்குள் விரைவில் அந்த பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

வீடியோஸ்


கரூர்