மண்டல அளவிலான குறுவட்ட கபாடி போட்டி- மாணாக்கர்கள் உற்சாகம்.

73பார்த்தது
கரூரில், நடைபெற்ற மண்டல அளவிலான குறுவட்ட கபாடி போட்டியில் மாணாக்கர்கள் உற்சாகம்.

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் கொங்கு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், மண்டல அளவிலான குறு வட்ட கபாடி போட்டி நேற்று துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் மாணவர்கள் பங்கேற்ற போட்டியை பள்ளியின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து துவக்கி வைத்தார்.

இன்று பெண்கள் பங்கேற்ற போட்டியை பள்ளியின் தாளாளர் பாலகுருசாமி துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 65 அணிகளும், பெண்கள் பிரிவில் 36 அணிகளும் பங்கேற்றது.

போட்டியில் 14, 17, 19- வயதுக்குடைய மாணாக்கர்களுக்கு இந்த போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் வெற்றி பெறும் முனைப்போடு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்கள், வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதன் காரணமாக போட்டியின் போது, தங்களது தனி திறமையை மாணாக்கர்கள் வெளிப்படுத்தியதால் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி