கரூர்: ரூ. 6, 000-மதிப்புள்ள குடிநீர் குழாயை களவாடிய வாலிபர் கைது

60பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகர் ஏவிடி கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 34). இவரது வணிக நிறுவனத்தில் விற்பனைக்காக ரூபாய் 6 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் குழாய்களை வைத்திருந்தார். 

இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி கரூர் சர்ச் கார்னர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 36) என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த குழாய்களை களவாடியுள்ளார். சம்பவம் குறித்து தினேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், குடிநீர் குழாய்களை களவாடிய விஜயகுமாரை கைது செய்தனர் என கரூர் மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி