ராயனூர்- இதய படபடப்பு உள்ள இளைஞர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை
கரூர் அடுத்த ராயனூர், பழனிவேல் நகர் , பஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கவின்ராஜ் வயது 31.
அண்மைக்காலமாக இவருக்கு இதயத்தில் படபடப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்படுவதால் அதற்காக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ஆயினும் அவருக்கு குணமாகவில்லை.
இதனால் விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்த கவின்ராஜ் ஜூன் 4-ம் தேதி காலை 10 மணியிலிருந்து மதியம் 12: 15 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அவரது மனைவி மணிமேகலை வயது 25 என்பவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் , உயிரிழந்த கவின்ராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தாந்தோணி மலை காவல் துறையினர்.