தொழிலாளர்கள் உரிமைக்காக போராடுவார்கள்- வடிவேலன் பேட்டி

68பார்த்தது
எந்த ஆட்சியாக இருந்தாலும் தொழிலாளர்கள் உரிமைக்காக போராடுவார்கள்- வடிவேலன் பேட்டி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி ஊதியம் வழங்க கோரி மாநிலம் தழுவிய அளவில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


இதன் தொடர்ச்சியாக
கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்க கரூர் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


இந்தப் போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


போராட்டத்தின் விரைவில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜி பி எஸ் வடிவேலன் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள்தான் திமுக ஆட்சியை கொண்டு வந்தனர்.

ஆனால், தொழிலாளர்களுக்கான சலுகை வழங்க மறுக்கிறார்கள்.

இந்த நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் போது வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

இல்லை என்றால், திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, தொழிலாளர்கள் தங்கள் உரிமையை பெறுவதற்காக போராடுவார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி