வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து
கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் வனத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வன உயிரின வார விழா கரூர் வன கோட்ட மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகள் பங்கேற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கவிதை போட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி, கதை சொல்லுதல் போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், வன அலுவலக ரேஞ்ச் அலுவலர்கள் தண்டபாணி, முரளிதரன் விஜயகுமார் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.