வாங்கல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழாவில் நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல்.
கரூர் அடுத்த வாங்கல் குப்பிச்சிபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த முகாமில் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா, விதவைகளுக்கான உதவித்தொகை, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், கர்ப்பிணிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் என பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், மன்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் , பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.