1, 640 இஸ்லாமியர்களுக்கு ரமலான் திருநாளை கொண்டாட நலதிட்டம்.

64பார்த்தது
1, 640 இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகையை கொண்டாட நலத் திட்டம்.


இஸ்லாமியர்களின் முக்கிய பண்டியான ரமலான் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி
கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட திமுக சார்பில் ரமலான் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு 1, 640 இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகை கொண்டாடும் வகையில் பிரியாணி அரிசி, மளிகை & மசாலா பொருள்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு அமைச்சர் வழங்கிய நலத்திட்டங்களை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி