ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், ஆர். டி மலை கிராமத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து, நேற்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இது குறித்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது,
பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம்.
மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்று உறுதி கூறியுள்ளனர்.
64 ஆண்டுகளாக தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். இந்த வருடம் இன்னும் சிறப்பாக செய்கிறோம்.
கடந்தாண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தால், கடந்தாண்டு நடைபெறவில்லை.
இந்த ஆண்டு 600 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு விடுக்க போவதாகவும்,
எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அமைச்சர், MLA-க்கள், மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொள்வர் என தெரிவித்தார்.