மயான வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட தாழ்த்தப்பட்ட கிராம மக்கள்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா , காருடையாம்
பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமுதாயத்தினர்.
30 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 70 வருடமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு என கரூர் - கோவை சாலையில் மயானம் இருந்து வந்தது.
சாலை விரிவாக்கம் செய்யும்போது மயானத்தை இல்லாமல் செய்து விட்டனர்.
இதனால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவர்களது குடும்பத்தில் எவரேனும் காலமாகிவிட்டால் மயானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்பதாலேயே அப்பகுதியில் மயானம் அமைக்க பெருமையாள்மையான சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று வாராந்திர குறைதீர் கூட்டத்தில்பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தேவராஜன் என்பவர் தெரிவிக்கும் போது, இதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் எங்களுக்கு மயானத்தை அதே பகுதியில் வேறொரு இடத்தில் ஒதுக்கி தந்தார்.
அதனையும் ஆதிக்க சக்தியினர் கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தடுத்து விட்டனர்.
ஆகையால் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் இடம் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.