வெண்ணைமலை- வணிக நிறுவனங்கள், கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள்.
கரூரை அடுத்த வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை நீதிமன்ற உத்தரவுபடி ஏற்கனவே சில வீடுகள், கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
நேற்று மீண்டும் இந்து அறநிலைத்துறையின் சார்பாக விடுபட்ட கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் ஈடுபட இருந்ததை அறிந்த அப்பகுதி வணிக நிறுவன உரிமையாளர்கள்,
அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்து வெண்ணைமலை சுற்றி உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.