வெங்கமேடு-நடந்து சென்ற முதியவர் மீது டூ வீலர் மோதி விபத்து.

51பார்த்தது
வெங்கமேடு அருகே நடந்து சென்ற முதியவர் மீது டூ வீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, சிவானந்த தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் வயது 62.

இவர் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 6: 15 மணி அளவில், கரூர் - வேலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது ஐயப்பன் கோவில் அருகே வந்தபோது, அதே சாலையில் டிஎன் 47 பி 7236 என்ற எண் கொண்ட டூவீலரில் வேகமாக வந்த நபர், நடந்து சென்ற தமிழ் செல்வன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் தமிழ்ச்செல்வனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி