வீரபாண்டிய கட்டபொம்மன் 256 வது பிறந்தநாள். கரூரில், திமுக சார்பில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை.
சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 பிறந்தநாள் இன்று.
தமிழகம் முழுவதும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு குழுவினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் அறிவாலயம் முன்பு கரூர் மாவட்ட திமுக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
இதனை தொடர்ந்து கட்டபொம்மன் பண்பாட்டு குழுவினரின் சார்பில் உருமி மேளம் இசைக்க தேவராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நடனமாடி சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை கொண்டாடினார்.