மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு.

84பார்த்தது
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு.


கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் செயல்படும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் குமார், இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த நிலையில் இருந்த முதியவரின் உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்துள்ளனர்.

மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? சிகிச்சைக்காக வந்த இடத்தில் உயிர் இழந்தாரா? இவரது உறவினர்கள் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி