பெரியாண்டாங்கோவில் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இளைஞர் படுகாயம்.
கரூர் மாவட்டம், பெரியார் நகர், பெரியாண்டாங் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் நவீன் குமார் வயது 26.
இவர் ஜூலை 26 ஆம் தேதி காலை 9. 30 மணி அளவில், ஈரோடு - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் பெரியாண்டாங் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர், விஸ்வநாதபுரி, தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ஜெகதீஸ்வரன் வயது 41 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நவீன் குமார் ஓடி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த நவீன் குமாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நவீன் குமாரின் தந்தை பழனிசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெகதீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.