டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்; நான்கு பேர் படுகாயம்

3302பார்த்தது
கரூர் மாவட்டம், தொழில்பேட்டை, சணப்பிரட்டி அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 42. கரூர் விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் புக்குராண்டி வயது 70. இவர்கள் இருவரும் அவர்களது டூவீலரில் கோவை - கரூர் சாலையில் சென்றனர். டூவீலரை ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.

இதே போல மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் பகதூர் சிங் என்பவர், அவரது டூவீலரில் புஞ்ச்ராஜ் சிங் வயது 28 என்பவரை பின்னால் அமர வைத்து டூவீலரில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனங்கள், கோவை-கரூர் சாலையில், ராயல் கோச் அருகே வந்தபோது, விஜய் பகதூர் சிங் ஓட்டிய டூ வீலர், ராஜேந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4- பேரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில், பலத்த காயங்கள் ஏற்பட்டது.உடனடியாக நான்கு பேரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் மாநகர காவல்துறையினர், டூவீலரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய விஜய் பகதூர் சிங் மீது வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி