அமராவதி பாலம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.

52பார்த்தது
அமராவதி பாலம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.


கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள லிங்கத்தூர் பகுதியில், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 56.

இவர் ஜூன் 6-ம் தேதி மதியம் 2: 45 மணி அளவில், கரூர் -ஈரோடு சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் பசுபதிபாளையம் அமராவதி பாலம் அருகே சென்றபோது, அதே சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர், மகாலிங்கம் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதிவிட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது.

இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த மகாலிங்கத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மகாலிங்கம் மனைவி சுப்புலட்சுமி வயது 47 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி