கரூர்: டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். தந்தை மகன் படுகாயம்.

69பார்த்தது
மொச்சகொட்ட பாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். தந்தை மகன் படுகாயம். 

கரூர் மாவட்டம் க. பரமத்தி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி வயது 42 இவரது தந்தை தங்கவேல் வயது (61). இவர்கள் இருவரும் பிப்ரவரி 3-ம் தேதி காலை 9 மணி அளவில், கோவை- கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொச்சகொட்ட பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கோவக்குளம், ஒட்ட தெருவைச் சேர்ந்த சேதுபதி வயது (24) என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், கருப்பசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் கருப்பசாமி மற்றும் தங்கவேல் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கருப்பசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த கருப்பசாமியின் மகன் ஹரிஷ் ராகவேந்திரா என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சேதுபதி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி