தண்ணீர் பந்தல் அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜமோகன் வயது 54.
இவர் மார்ச் 14ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், கரூர்- வாங்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது,
திருச்சி மாவட்டம், தொட்டியம், சிவன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை வயது 39 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, ராஜ்மோகன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த ராஜ்மோகனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச் சம்பவம் அறிந்த ராஜ்மோகனின் மனைவி அலமேலு வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.