திண்ணப்பா நகர் அருகே பாட்டியுடன் டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கருப்ப கவுண்டன் புதூர் அருகே உள்ள பழனியப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் மனைவி வனிதா வயது 36.
இவரது பாட்டி, கரூர் ராமானுர் அருகே உள்ள ராஜா நகரை சேர்ந்த தாயாரம்மாள் வயது 72.
இவர்கள் இருவரும் ஜூலை 28ஆம் தேதி மதியம் 12: 15 மணியளவில், திருச்சி - கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்களது வாகனம் திண்ணப்பாநகர் தெரசா பள்ளி அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த மற்றொரு அடையாளம் தெரியாத வாகனம், வனிதா ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வனிதாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதேசமயம் பின்னால் அமர்ந்து வந்த தாயாரம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனிதா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.